மேலும் அறிய

மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெற்றோருக்கு கத்தி குத்து : மகன்களுடன் பாஜக பிரமுகர் கைது..!

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவளித்ததாக புகார் அளித்த பெற்றோரை கத்தியால் குத்திய பாஜக பிரமுகரின் 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். 60 வயதான இவர் பாஜக மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொது செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட அதே கிராமத்தை சேர்ந்த 6 சிறுமிகளிடம் தனது உடைகளை களைந்து உடல் உறுப்புகளை காண்பித்தும், செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும், படத்தில்வருவது போன்று தன்னிடம் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இவ்வாறு நடத்துக்கொள்ளவில்லை என்றால் உங்களை கட்டிப்போட்டு பாலியல் தொந்தரவு செய்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.


மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெற்றோருக்கு கத்தி குத்து : மகன்களுடன் பாஜக பிரமுகர் கைது..!

இதனால் அச்சம் அடைந்த சிறுமிகள் அந்த காமக்கொடூரனிடம் இருந்து தப்பி இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள் மகாலிங்கத்திடம் இவ்வாறு குழந்தைகளிடம் நடந்துகொண்டது குறித்து கேட்டதற்கு அவர்களை கொலை செய்து விடுவதாகவும், இது குறித்து புகார் அளிக்க கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த ஒரு சிறுமிகளின் பெற்றோர் ஒரு சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தை தேடி பிடித்து கைது செய்தனர். 


மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெற்றோருக்கு கத்தி குத்து : மகன்களுடன் பாஜக பிரமுகர் கைது..!

இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி புகார் அளித்த சிறுமியின் தந்தைக்கும் தங்களுக்கும் போகியத்திற்கு இடம் வாங்கியது தொடர்பாக பணப்பிரச்சனை உள்ளதாகவும் பணத்திற்காக வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளதாகவும் உரிய விசாரணை செய்யாமல் போலீசார் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் புகார் அளித்த சிறுமியின் பெற்றோர் (பாண்டியராஜன்) வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பாஜக பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மகாலிங்கத்தின் 2 மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து வழிமறித்து கத்தி  மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். தடுக்கவந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த ஒருவரையும் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தவர்களை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 


மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெற்றோருக்கு கத்தி குத்து : மகன்களுடன் பாஜக பிரமுகர் கைது..!

பாலியல் புகார் அளித்ததற்காக கொலைமிரட்டல் விடுத்துவந்த நிலையில் பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கி கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜவகர் சுதாகர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் மேலும் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு உள்ளனர். சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்த பெற்றோர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.abplive.com/crime/mayiladuthurai-bjp-person-who-indulged-in-showing-porn-and-sexual-abusive-content-to-girl-children-arrested-in-pocso-9104

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget