மீன்கள் ஏற்றி செல்லும் வாகனத்தில் இருந்து 4480 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!
காரைக்கால் மதகடி பகுதியில் வாகன சோதனையில் மீன்கள் ஏற்றி செல்லும் வாகனத்தில் இருந்து 4480 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரப்பனுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மதகடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் மீன்கள் ஏற்றிச்செல்லும் கண்டனர் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது திடீரென போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவதைக் கண்டு சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தின் விளக்குகளை அணைத்தனர்.
இருப்பினும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஒருவர் கன்டெய்னர் வாகனத்தின் அருகே சென்று டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார், அப்பொழுது அதில் மறைந்திருந்த டிரைவர் திடீரென பள்ளத்தில் எகிறி குதித்து ஓடினார். போலீசார் டிரைவர் துரத்திப் பிடிக்க முயன்றனர் இருப்பினும் டிரைவரை போலீசார் கண்ணில் அகப்படாமல் புதருக்குள் புகுந்து சென்று தப்பியோடியுள்ளார். இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனைவரும் கண்டெய்னர் லாரியை சோதனை செய்தனர்.
கன்டெய்னரில் மீன்கள் வைக்கும் பெட்டிகள் அடுக்கடுக்காக வைத்திருந்தன, இதனை ஒவ்வொன்றாக போலீசார் அகற்றினர் அப்பொழுது மீன் பெட்டிகளுக்கு நடுவே சுமார் 128 கேன்களில் 4450 லிட்டர் அதாவது ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் மீன் ஏற்றி வந்த லாரியை மற்றும் ஏரி சாராயத்தையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரியில் எரிசாராயம் எடுத்துச்செல்வது தெரியாமல் இருப்பதற்காக எரிசாராயத்தை உள்பக்கமாக அதனை மறைக்கும் விதத்தில் மீன் அட்டைப் பெட்டிகளில் நிரப்பி அதனை முழுவதுமாக மூடி எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி மதுபான ஆலை சிக்கியது.... பெட்டி பெட்டியாக மதுபானங்கள் பறிமுதல்!
இதேபோல் காரைக்காலில் போலீஸ் அதிரடி சோதனையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலை பச்சூர் தில்லை நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு போலியாக மதுபான ஆலை இயங்கி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கதவை உடைத்து அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு பெட்டி பெட்டியாக 252 லிட்டர் போலி மதுபான பாட்டில்களும், கேன்களில் 1,100 லிட்டர் எரிசாராயமும், போலி மதுபான பாட்டில்களுக்கு பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள், லேபிள், தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை மூட்டைகளில் இருந்தன. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த குடோனை சோதனை செய்தபோது, போலி மதுபான பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு வேனும், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த போலி வாகன நம்பர் பிளேட்டுகளும் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.