மேலும் அறிய

படிக்க மாட்டாயா கேட்ட பாட்டி..? வெட்டிக்கொன்ற பேரன்..மறைத்து வைத்த தாய்

மகன் கொலை செய்து விட்டான் என்பதை தெரிந்து கொண்ட தாய் கிருஷ்ணபிரியா, மகனை அழைத்துக் கொண்டு காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு அழைத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள மதுரையங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னதாயி. இவர் கடந்த 27ம் தேதி காலையில் வீட்டில் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் மூதாட்டி சின்னதாயிக்கும் உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள 47 வீடுகளுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணபிரியா என்பவர் வீடு மட்டும் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டை பூட்டிவிட்டு எங்கே சென்றார்? என்ற விசாரணையில், காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இவரது கணவர் கடந்த 15 அண்டுகளுக்கு முன்பே இறந்து போனார். இவரது தம்பி சேதுராஜ், அரியானூர் பகுதியில் தங்கியிருந்து டாக்டருக்கு படித்துள்ளார். இதனால் கிருஷ்ணபிரியா, 17 வயதான மகன், மகளுடன் அங்கு வந்து தங்கியுள்ளார். அப்போது அரியானூர் பகுதியில் ஓட்டல் ஒன்றை தொடங்கி நடத்தி வருவதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் இவரது மகனான 17 வயதான பிளஸ் 1 மாணவன்தான் மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவன், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரை அங்கும், இங்குமாக 4 பள்ளியில் சேர்த்துள்ளனர். செல்போனில் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். கொலை விளையாட்டுக்களை அதிகமாக பார்த்து விளையாடி வந்ததும் தெரியவந்தது. இவர் ஊர் சுற்றிவந்ததை அந்த மூதாட்டி அவ்வப்போது கண்டித்துள்ளார். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை அவர் கண்டிப்பாராம். பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாயா? என கேட்டு, அவ்வழியாக சென்ற அச்சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மூதாட்டி சின்னதாயி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். வீட்டின் முன்பு பாட்டி கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து சென்ற அச்சிறுவன், மூதாட்டியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். மகன் கொலை செய்து விட்டான் என்பதை தெரிந்து கொண்ட தாய் கிருஷ்ணபிரியா, மகனை அழைத்துக் கொண்டு காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு அழைத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் சிறுவனையும், கொலையை மறைத்ததாக தாய் கிருஷ்ணபிரியாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தாயை சேலம் பெண்கள் சிறையில் அடைத்த நிலையில், மகனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதற்கிடையில் மூதாட்டியை கொலை செய்வதற்கு காரணம், தன்னை படிக்குமாறு கூறியதால் தான் கோபத்தில் வெட்டி கொன்றாரா? அல்லது செல்போனில் கொலை சம்பவங்களை பார்த்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget