மேலும் அறிய

புதுச்சேரியில் RTO இ-சலான் மோசடி: வாட்ஸ்ஆப் மூலம் ரூ.6.39 லட்சம் இழப்பு! உங்கள் கணக்கும் பாதுகாப்பாக இருக்க இதை தெரிந்து கொள்ளுங்கள்!

புதுச்சேரி : வாட்ஸ் ஆப் மூலம் RTO இ-சலான் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்த7 பேரிடம் ரூ.6.39 லட்சம் மோசடி

புதுச்சேரி: வாட்ஸ் ஆப் மூலம் RTO இ-சலான் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்த7 பேரிடம் ரூ.6.39 லட்சம் மோசடி

RTO ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் மோசடி 

நைனார்மண்டபத்தை சேர்ந்தவருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் RTO ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது. அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. அதேபோல் மூலக்குளத்தை சேர்ந்தவர் ஒருவர் கணக்கில் 32 ஆயிரத்து 920, புதுச்சேரி பெண் 64 ஆயிரத்து 393, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 40 ஆயிரத்து 630, மூலக்குளம் பெண் 42 ஆயிரம், செட்டிப்பட்டு பெண் 45 ஆயிரம், முதலியார்பேட்டை நபர் ஒரு லட்சத்து 84 ஆயிரம் என 7 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 39 ஆயிரத்து 543 ரூபாய் இழந்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் சைபர் மோசடி

தற்போது  RTO ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது. வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் (GROUP) உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ (Apk file) install செய்து உங்கள் வாகனத்திற்கு Fine amount-ஐ (தண்டத்தொகை) உடனே செலுத்த வேண்டும் என மெசேஜ் வரும். அதை update செய்யவில்லை என்றால் உங்களது வாகனத்தின் லைசென்ஸ் முடக்கபட்டுவிடும் என செய்தி இருக்கும்.

அதை உண்மையென நம்பி கிளிக் செய்துவிட்டால் உங்கள் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படும்; மற்றும் உங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிடும். மேலும் இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் மெசேஜ் தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்களது மொபைல் எண்ணில் இருந்தே உங்களுக்கு தெரியாமலே பகிரப்படும். இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப்பை டவுன்லோடு செய்தால் அவர்களுடைய வாட்ஸ்ஆப் நம்பரும் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டும் மற்றும் மொபைல் போனில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தரவுகளையும் ஹேக் செய்தும் பண மோசடி செய்வார்கள்.

இதே போன்று வாட்ஸ்ஆப் மூலமாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள தெரிந்த நபர்களின் RTO Challan App- fine amount எனவும், sbi bank, axis bank, union bank etc., ஆகிய வங்கிகளின் reward points எனவும் (அ) அரசாங்க நலதிட்ட உதவி, மானியம் என்று வரும் எந்த Apk file-களையும் உங்களது மொபைலில் பதிவிறக்கம் (INSTALL) செய்ய வேண்டாம். இது போன்று போலியான மெசேஜ்கனை உடனே பிளாக் (Block) செய்ய வேண்டும்.

 போலியான லிங்குகளையோ open செய்ய வேண்டாம்!

எனவே பொதுமக்கள் யாரும் சமூக வலைத்தளத்தில் இது போன்று போலியான லிங்குகளையோ அல்லது APK Applicationகளையோ Install செய்து அதில் கேட்கும் தகவல்களை தந்து பணத்தை ஏமாற வேண்டாம் என்றும் மேலும் இதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் புதுச்சேரி இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலையம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சைபர்கிரைம் புகார் அளிப்பது எப்படி ?

மேற்கூறிய தகவல் கிடைக்க பெற்றால் அவற்றை cybercrime.gov.in எனும் வலைதள முகவரியில் உள்ள Report Suspect optionல் பதிவேற்றி புகார் செய்யலாம். மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.inஐ பயன்படுத்தவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Embed widget