மேலும் அறிய

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

தமிழக-புதுச்சேரி மாநில எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தேவா (வயது 24). நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதறிய நிலையில் தேவாவை, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், உடனே போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவாவிடம் விசாரித்தனர்.

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டில், பேனர், சூட்கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த சம்பவம் தமிழக எல்லை பகுதியில் நடந்ததால், கடலூர் போலீசார், இதுபற்றி புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன், தாடி அய்யனார், அருணாசலம், அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இதில் தாடி அய்யனார் மற்றும் அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் தனித்தனி கும்பலாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாசலம் குழுவில் இருந்த தேவாவின் உறவினரை, தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் தாக்கியுள்ளனர். அதன் பிறகு தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் கடந்த சில நாட்களாக கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தேவா தனது கூட்டாளிகளுடன் நேற்று அதிகாலை மலட்டாறு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தேவா மற்றும் தாடி அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

இந்த மோதலில் தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் வெட்டு காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை சிதைந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கு இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஜிம்பா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில், தாடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவர், புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தாடி அய்யனார் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளதும், அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழக எல்லைப்பகுதியான ரெட்டிச்சாவடி கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், இரு ரவுடி கும்பலுக்கும் இடையே எதற்காக மோதல் ஏற்பட்டது?, நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்?, நாட்டு வெடிகுண்டை வீசும்போது எதிர்பாராதவிதமாக வெடித்து தேவாவின் கை சிதைந்ததா? அல்லது தாடி அய்யனார் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அவரது கை சிதைந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Embed widget