Crime: சத்தீஸ்கரில் சாலை விபத்து; வேகமாக வந்த லாரி மோதி பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு..!
சத்திஸ்கர் மாநிலத்தில் பலோடா பசார் மாவட்டத்தில் இன்று (மே, 15) காலை கோரமான விபத்து நடைபெற்றுள்ளது. அதில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் பலோடா பசார் மாவட்டத்தில் இன்று (மே, 15) காலை கோரமான விபத்து நடைபெற்றுள்ளது. அதில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை நடைபெற்ற இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிவந்த வாகனத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தில் இறந்த 6 பேரில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் அடங்குவர் என பலோடா பஜார் எஸ்எஸ்பி தீபக் ஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.





















