கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மகள்
அப்பா ரவியை கொல்ல திட்டமிட்ட மகள், இரவில் மது போதையில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த ரவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார் மகள் பவித்ரா.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரை சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு லாரி டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுடைய மகள் பவித்ரா திருமணமாகி வெளியூரில் இருந்தவர். கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கும் இடையர் வலசையை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து வாழும் மகள் வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருப்பது தந்தைக்கு அவமானமாக தெரிந்துள்ளது. இதனால் அந்த நபருடன் ஏற்பட்டுள்ள உறவை துண்டித்து விட்டு கணவரோடு சேர்ந்து வாழுமாறு தகப்பனார் ரவி கண்டித்துள்ளார். ஆனால், தாயார் பாக்கியம் மகளின் கள்ளக்காதலுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனால், மகள் பவித்ரா முருகானந்தத்துடன் ஏற்பட்ட உறவை துண்டிக்க மனமில்லை. இந்த நிலையில் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பா ரவியை கொல்ல திட்டமிட்ட மகள், இரவில் மது போதையில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த ரவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார் மகள் பவித்ரா.
இதற்கு தாயார் பாக்கியம் மற்றும் கள்ளக் காதலன் முருகானந்தம் இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால் ரவி போதையில் உறங்கும் பொழுது மின்சாரம் தடைபட்ட நேரத்தில், மண்ணெண்ணை விளக்கை எரிய விட்டதில், அவர்மீது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக இவர்கள் நாடகம் நாடகமாடியுள்ளனர். இதனால் உடல் முழுதும் தீப்பிடித்து 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையில் அளித்துள்ளனர். புகாரின்பேரில் மகள் பவித்ரா,கள்ளக்காதலன் முருகானாந்தம் மற்றும் தாயார் பாக்கியம் ஆகிய இவர்கள் மூன்று பேரையும் போலீசார் உரிய முறையில் விசாரணை செய்ததில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அப்பாவை தீர்த்துக்கட்டிய சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மனைவி பாக்கியம் மற்றும் கள்ளக்காதலன் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பவித்ராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண பந்தத்தை மீறி வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த மகளை, கணவருடன் சேர்ந்து வாழுமாறு கண்டித்த தந்தையை, தனது தாயார் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு மகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - watch video | பால் குடம் சுமந்த பக்தர்களின் பாதங்களை குளிர்வித்த இஸ்லாமியர்கள் - மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ