மேலும் அறிய
Crime : பெண்ணை பாலியல் தொல்லை தந்த ஆர்.பி.எஃப் சப் இன்ஸ்பெக்டர் கைது.. சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?
தாம்பரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் கைது

தாம்பரம்
பாலியல் சீண்டல் புகார்
சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில், நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் மனைவியை, பின் தொடர்ந்து மது போதையில் வந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கையும் களமாக பிடித்த பொதுமக்கள்
சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் தப்பி செல்ல முயன்றபோது அப்பெண்ணின் கணவர் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது மது போதையில் இருந்த சீனிவாச நாயக், தான் ரயில்வே போலீஸ் என்று கூறி தாம்பரம் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வழக்கு பதிவுசெய்த போலீசார் சீனிவாச நாயக்கிடம் விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இந்த சம்பவத்தின்போது அவர் மது அருந்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டரை போலீசார் விசாரித்து வந்துள்ளார். தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து, ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















