மேலும் அறிய

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 19). இவர் மதுரை மாவட்டம் அய்யூரில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். ஜெகனுக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது 3 வயது குழந்தையுடன் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். அங்கு செங்கல் சூளையில் ஜெகனுடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ஜெகனை பார்க்க அவருடைய உறவினர் பழனியப்பன் (28) செங்கல்சூளைக்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தைக்கு பழனியப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த குழந்தையின் தாயார் ஜெகனிடம் நடந்த விவரங்களை கூறி பழனியப்பனை வீட்டில் இருந்து அனுப்பும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த குழந்தையால்தான் நமக்கு பிரச்சினை என்று கூறிய ஜெகன் குழந்தையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் மதுரையில் இருந்து குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

இதைதொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையின் தாய் உள்பட 3 பேரும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு பிரிவினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

மேலும் இதில் குழந்தையின் தாய் ஈரோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விராலிமலை போலீசார் அங்கு சென்று குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மேலும் குழந்தையின் இறப்பில் தொடர்புடைய ஜெகன் மற்றும் பழனியப்பனை விராலிமலை போலீசார் கைது செய்து விராலிமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget