மேலும் அறிய

புதுகை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை... டாஸ்மாக் கடை சூறை: பதற்றமான நிலையால் அதிரடிப்படை குவிப்பு

மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது முருகேசனின் பைக்கை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. முருகேசன் பைக்கை நிறுத்தியவுடன் அவரை அந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பைக்கில் வந்த வாலிபரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை சூறையாடியதால் பதற்றம் நிலவுகிற. அப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் முருகேசன் (25). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்றிரவு 7 மணிக்கு மழையூர் கடைவீதியில் இருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்றார். மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது முருகேசனின் பைக்கை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. முருகேசன் பைக்கை நிறுத்தியவுடன் அவரை அந்த மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்ததும் மழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முருகேசன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் அதிகமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதற்கிடையில் கொலை சம்பவத்தால் பதற்றம் நிலவியதால் டாஸ்மாக் கடையை மூடி விட்டு பணியாளர்கள் சென்று விட்டனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்துக்கு டாஸ்மாக் கடை இருப்பது தான் காரணம் என்று கூறியவாறு முருகேசனின் உறவினர்கள் மற்றும் மக்கள் அந்த கடையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை, பெயர் பலகை, டேபிள், சேர், மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும் டாஸ்மாக் கடை மீது கற்களை வீசி தாக்கினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டாஸ்மாக் கடை வளாகத்தில் இருந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் மழையூரில் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதாக அவர் உறுதியளித்ததால் நள்ளிரவு 12 மணிக்கு சாலை மறியலை மக்கள் கைவிட்டனர். அதிகாலை வரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இதனால் இன்று காலை 6 மணிக்கு 200க்கும் மேற்பட்டோர் திரண்டு மீண்டும் அதே இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget