Crime: கடனை திருப்பி கேட்ட தொழிலாளி: கொலை செய்த இருவர் கைது! புதுச்சேரியில் பயங்கரம்!
புதுச்சேரி: கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கூலி தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: கடனை கேட்டு அசிங்கப்படுத்தியதால், தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்ததாக கைதான டிரைவர் உள்ளிட்ட இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரிடம், நவீனா கார்டன் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் தொகையை நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் வீட்டுக்கு சென்று ரஞ்சித்குமார், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரது கூட்டாளி ஜார்ஜ் (32) இருவரும் சேர்ந்து கீழே கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித்குமாரின் தலையில் வேகமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ரஞ்சித்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த படுகொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கண்ணன், ஜார்ஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்