மேலும் அறிய

Crime : வாழை இலையில் மடித்து மூட்டை கட்டி கல்குவாரியில் வீசப்பட்ட பெண் சடலம்; என்ன நடந்தது ?

கொலை செய்ததை மறைப்பதற்காக இளவரசியை வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி திருவக்கரை கல்குவாரி பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளான்

புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஜீவுக்கும் இளவரசிக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் இளவரசியை ராஜு அடித்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்ததை மறைப்பதற்காக இளவரசியை வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இருக்கக்கூடிய திருவக்கரை கல்குவாரி பகுதியில் உள்ள பள்ளத்தில் இளவரசியை வீசிவிட்டு சென்றுள்ளார். 

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக இளவரசி காணவில்லை என இளவரசி உறவினர்கள் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியை தேடி வந்தனர். இந்நிலையில் இளவரசியை அடித்துக் கொலை செய்த ராஜு போலீசாருக்கு பயந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்பொழுது அவர் போலீசாரிடம் கூறுகையில்... எனக்கும் இளவரசிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்து அடித்து கொலை செய்து விட்டேன். அதனை மறைப்பதற்காக வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி திருவக்கரை பகுதியில் கல்குவாரியில் வீசிவிட்டு சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

கல்குவாரி தண்ணீரில் மூட்டையாக கிடந்த சடலம்

இதனை அடுத்து புதுச்சேரி போலீசார் விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் திருவக்கரை பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது குற்றவாளியான ராஜூ இளவரசியை அடித்து கொலை செய்து கல்குவாரி பள்ளத்தில் வீசிய இடத்தை காண்பித்தார். அப்போது கல்குவாரி தண்ணீரில் மூட்டை  ஒரு ஓரமாக கிடந்தது. அந்த மூட்டையில் இளவரசி சடலமாக மீட்கப்பட்டார்.

 இதனை தொடர்ந்து போலீசார் இளவரசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி (25) என்ற பெண் சுற்றி திரிவார். இவர் அப்பகுதியில் வருவர்களிடம்  தகாத வார்த்தைகள் பயன்படுத்தி சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி மரக்காணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு டீக்கடை அருகில் இருந்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கத்திக்குத்து பாலா (45) என்ற போதை ஆசாமி சென்றுள்ளார்.

இவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டதாக கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த கத்திக்குத்து பாலா அருகில் கிடந்த கல்லை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி தலையில் தாக்கி உள்ளார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget