இன்ஸ்டாகிராமில் Hacker என கூறி வீடியோ கால் வரசொல்லி இளம்பெண்ணுக்கு மிரட்டல் - வாலிபர் கைது
அந்தரங்க புகைப்படத்தை கேட்டு மற்றும் வீடியோ காலில் வர சொல்லி மிரட்டிய கண்டமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
Hacker, cyber department என்று சொல்லி பெண்களுடைய அந்தரங்க புகைப்படத்தை கேட்டு மற்றும் வீடியோ காலில் வர சொல்லி மிரட்டிய கண்டமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து கடந்த நவம்பர் மாதம் சில மெசேஜ்களும் பின்பு அதனைத் தொடர்ந்து நான் ஹேக்கர் மற்றும் சைபர் டிபார்ட்மெண்ட் என்று சொல்லி அந்த பெண்ணை மிரட்டி, அந்த பெண்ணுடைய தனிப்பட்ட புகைப்படங்களை கேட்டு, வீடியோ காலில் வர வேண்டும், சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும் என்று ஒரு நபர் மிரட்டி உள்ளார் மேற்படி பயந்து போன அந்த பெண் அந்த அக்கவுண்ட்டை பிளாக் செய்து விட்டார்.
வேறு ஒரு புதிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மிரட்டல் விடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பெண்ணுடைய புகைப்படத்தை எடுத்து அரை நிர்வாணமாக மாற்றம் செய்து அந்தப் பெண்ணுக்கு அனுப்பி நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் நான் எங்கு கூப்பிட்டாலும் நீ வரவேண்டும் இல்லை என்றால் உன்னுடைய இந்த மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டிலும் சமூக வலைதளங்களும் விட்டுவிடுவேன், மேலும் என்னுடைய இந்த அக்கவுண்ட்டை நீ பிளாக் செய்தால் நான் மேலே சொன்னது நடக்கும் என்று மிரட்டிய நபர் மீது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை யார் உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அந்த பெண்ணை மிரட்டிய நபரை கைது செய்து அவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பரிசோதித்த போது நிறைய பெண்களை இதுபோல் மிரட்டி இருப்பது தெரியவந்தது.
ஆகவே போலீசார் அவரை கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி திரு.மோகன் முன்பு ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேற்படி இது பற்றி சைபர் கிராம் ஆய்வாளர் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் கூறியது யாதெனில் இது போன்ற சமூக வலைதளங்களில் மிரட்டல் வந்தால் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், அல்லது அருகில் இருக்கின்ற காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கலாம். இலவச தொலைபேசி என்னில் வருகின்ற புகார்களை தெரிவித்தவர்களின் விவரம் வெளியிடப்படாமல் அவர்களின் புகார்களின் மீது மட்டும் புதுச்சேரி இணைய வழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் பெண்களை மிரட்டுகின்ற அல்லது தொந்தரவு செய்கின்ற எந்த புகாராக இருப்பினும் 1930 எண்ணிற்கு புகார் கொடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் பெண்கள் இதுபோன்ற சமூக வலைதள தாக்குதலுக்கு அல்லது மிரட்டல்களுக்கோ உள்ளானால் உடனடியாக தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களுக்கு நம்பிக்கை கூறிய நபர்களுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும் தற்போது புதுச்சேரி இணையவிழி குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் இணையதளம் மூலமாக நடக்கின்ற அனைத்து குற்றங்களையும் கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்கள் (software) இருப்பதால் இது போன்ற மிரட்டல் விடும் நபர்கள் இணைய வழி மோசடிக்காரர்களை 100% கண்டுபிடித்து விடுவோம் என்றும் எச்சரிக்கை செய்தனர்.