மேலும் அறிய

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். கைதி ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வாரன்ட் இருந்தால் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கைது செய்வார்கள். அதே போல தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபடும் நபர்களையும் இவ்வாறு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இவ்வாறு வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரன்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். 

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள், உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிவகங்கை தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பினார்.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்படையினர் தேடி வந்த ரவுடி 11.30 மணிக்கே சென்றுவிட்டாரே என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே பாதைதான் இருக்கிறது. இந்தவழியாக செல்லவில்லையே என கேட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக மெயின் கேட் வழியாக கைதிகள் வெளியே வருவார்கள். ஆனால் இந்த ரவுடிக்கு மட்டும் சிறை காம்பவுண்ட்சுவரில் இருக்கும் கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து உளவுப் பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் மத்திய சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

Embed widget