வேலூர்: பாலிடெக்னிக் மாணவன் அடித்துக்கொலை; தாயின் கண்முன் பயங்கரம்! தாய்மாமன் கைது!
கே.வி.குப்பம் அருகே பாலிடெக்னிக் மாணவன் அடித்துக்கொலை; தாயின் கண்முன் பயங்கரம்! தாய்மாமன் கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சின்ன லத்தேரியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் - கிரிஜா தம்பதியர். இவர்கள் பெங்களூருவில் தங்கி கூலிவேலை செய்து வருகிறனர். இவர்களுடைய மகன் தருண்குமார் வயது (20). இவர் சின்ன லத்தேரியில் உள்ள அவரது வீட்டில் தனியாக தங்கி குடியாத்தத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வருகின்றார்.
அதே சின்ன லத்தேரியிலுள்ள தாய் கிரிஜாவின் சகோதரர் ரமேஷ் ( தாய்மாமன்) என்பவரின் வீட்டில் சென்று உணவு மட்டும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இந்தநிலையில், தான் தாய்மாமாவின் மகள் அடிக்கடி ஆண் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்து பேசுவதாக தாய் மாமா ரமேஷிடம் தருண்குமார் கூறியுள்ளார். அப்போது, என் வீட்டிலேயே மூன்று வேலையும் ஓசி சாப்பாடு சாப்பிட்டுகொண்டு என் மகளையே தவறாக நடந்துகொள்வதாக சொல்கிறாயா என ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி சக்தீஸ்வரி ரமேஷின் மகன் நவீன் ஆகிய மூவரும் தருண்குமாரை அடித்துள்ளனர்.
மேலும் இது குறித்து தருண் குமார் அவரது தாய் பெங்களூரில் உள்ள கிரிஜாவிடம் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பெங்களூருவில் இருந்து சின்ன லத்தேரிக்கு வந்த கிரிஜா, பிரச்சினை குறித்து சகோதரர் ரமேஷிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் இரு குடும்பத்தாருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ரமேஷ் மற்றும் அவரது மனைவி சக்தீஸ்வரி, மகன் நவீன் ஆகியோர் சேர்ந்து கொண்டு மீண்டும் தருண்குமாரையும் அவருடைய தாய் கிரிஜாவையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கு இருந்த காய்ந்த தென்னை மட்டையை கொண்டு தருண் குமார் தலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தருண்குமாருக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அடிபட்டதில் அவருக்கு 30 தையிலுக்கு மேல் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தருண்குமாரின் தலையில் தாக்கியதில் தருண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த கொட்டிய நிலையில் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.
இதனை கண்ட அவருடைய தாய் கதரி அழுத்து கொண்டே கூச்சலிட்டுள்ளார் அக்கம் பக்கத்தினர் அருண்குமார் மற்றும் அவருடைய தாயை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் தாய் கிரிஜா மகன் தருண்குமார் இருவரும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் தருண்குமார் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தாய் கிரிஜா லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லத்தேரி காவல்துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு நிலையில், ரமேஷை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள சகதீஸ்வரி,நவீன் ஆகிய இரண்டு நபர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது