மேலும் அறிய

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற நிலையில், வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த  அருண்குமார் என்ற நபர் 9 ஆவது நபராக  கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம்  தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி பாலியல் வழக்கில்  கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகலானது வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கு விசாரணை வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கொரோனா தொற்றுப் பரவல், சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களில் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் குற்றப்பத்திரிகை நகல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Embed widget