மேலும் அறிய

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த காவலருக்கு, காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் உபகோட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற மூதாட்டி கடலி மெயின் ரோட்டில் இன்று காலை தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு மர்மநபர்கள் மங்களம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதில், மூதாட்டி மங்களம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, குத்தாலம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் சுரேஷ், நல்லாடை செக்போஸ்டில் டுயூட்டி மாற்றுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் சுரேஷ் சற்றும் தாமதிக்காமல், மூதாட்டியிடம் விளக்கமும் கேட்காமல் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வழிப்பறிக் கொள்ளையர்களின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதியுள்ளார். ஆனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேகமாக வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். உடனடியாக தனது வாகனத்தை திருப்பி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று, செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் என்ற இடத்தில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார் காவலர் சுரேஷ். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி தப்பியோடினர். அங்கும் அவர்களை விரட்டிச் சென்ற காவலர் சுரேஷ் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தார். 

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

அப்போது அவ்வழியே சென்ற தலைமை காவலர் அன்பழகன் கொள்ளையனை தப்பியோடாமல் முதல்நிலை காவலர் சுரேஷக்கு உதவினார். மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடினான். இதையடுத்து, காவலர் சுரேஷ் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் செம்பனார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன், தனிப்படை காவல் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் விரைந்து சென்று பிடிபட்ட கொள்ளையனை செம்பனார்கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவம் நடைபெற்ற இடம் பெரம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுகந்தி, கொள்ளையனை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, பெரம்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவன் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த குணசேகரன் மகன் முத்து என்கிற முத்தழகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நகையுடன் தப்பியோடிய மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு வழிப்பறி கொள்ளையன் ராஜா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கண்ணெதிரே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளை நடைபெற்ற ஐந்தே நிமிடத்தில் தனி ஆளாக துணிந்து விரட்டி சென்று கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர் சுரேஷை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
புதுச்சேரியில் அதிர்ச்சி! காயப்போட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்... பாழடைந்த வீட்டில் கண்டெடுப்பு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! காயப்போட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்... பாழடைந்த வீட்டில் கண்டெடுப்பு!
பைக் ஓட்டிய 17 வயது சிறுவன்... பறிபோன முதியவரின் உயிர்! தந்தையைச் சிறையில் தள்ளிய காவல்துறை!
பைக் ஓட்டிய 17 வயது சிறுவன்... பறிபோன முதியவரின் உயிர்! தந்தையைச் சிறையில் தள்ளிய காவல்துறை!
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
பழைய கடனை அடைக்க புதிய கடனா? பேராபத்தில் சிக்க வைக்கும் கடன் பொறி! தெரிந்துகொள்ளுங்கள்..
பழைய கடனை அடைக்க புதிய கடனா? பேராபத்தில் சிக்க வைக்கும் கடன் பொறி! தெரிந்துகொள்ளுங்கள்..
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Embed widget