(Source: Poll of Polls)
ஆந்திராவில் இருந்து வந்த கார்! மடக்கிப் பிடித்த போலீஸ்.. 250 கிலோ செம்மரம் பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து கார் மூலம் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ கொண்ட 25 கிலோ வீதம் 10 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

ஆந்திராவில் இருந்து காரில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை கடத்தி வந்த வாலிபரை தனிப்படைடி.எஸ்.பி கைது அதிரடி காட்டியுள்ளார்.
ரகசிய தகவல்:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பம் அருகே சொகுசு காரில் செம்மரகட்டைகள் கடத்தி இருப்பதாக திருப்பத்தூர் டி.எஸ்.பி சௌமியாவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்துள்ளனர்.
சுற்றி வளைத்த காவல்துறை:
அப்போது சுசூகி சியேஸ் காரில் 10 செம்மரக்கட்டைகள் இருப்பதை உறுதி படுத்தி உள்ளனர்.பின்னர் காரை ஓட்டி வந்த ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு நெல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் துக்கன் (32) என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திராவிலிருந்து கடத்தல்
இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கார் மூலம் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ கொண்ட 25 கிலோ வீதம் 10 செம்மரக்கட்டைகளை வாங்கி வந்து திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் கொடுப்பதற்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வன சரக அலுவலர் சோழைராஜன் தலைமையிலான வனக்காவலர் அண்ணாமலை உள்ளிட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
250 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்:
இதனை எடுத்து வனத்துறையினர் காருடன் 250 கிலோ செம்மரக்கட்டைகளையும் கடத்தி வந்த துக்கன் என்பவரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செம்மரக்கட்டைகளை கொண்டுவர செய்த ஜமுனமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறையில் அடைப்பு
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த வாலிபரை தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டையில் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..






















