போதுமான தூக்கம் இல்லாமல் போனால் நினைவாற்றல் குறையும், கவனம் சிதறும் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்
சிலர் தனிமையில் இருப்பது நல்லது என நினைப்பார்கள். அது மனநலனையும் மூளைச் செயல்பாடுகளையும் பாதித்து, மனச்சோர்வுக்கும் காரணமாகும்.
அதிக நேரம் ஸ்கீரிம் டைம் மற்றும் ஃபோனை பார்ப்பது மூளைக்கு சோர்வை ஏற்படுத்தி, நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை குறைக்கும்.
அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகள் மூளை நரம்புகளை பாதித்து, மன தெளிவை குறைக்கும்.
உங்களின் உடல் இயக்கம் குறைந்தால், இரத்த ஓட்டம் குறைந்து மூளைக்கு ஆக்சிஜன் கொடுப்பதை குறைக்கிறது.
இந்த பழக்க வழக்கங்கள் மூளை செல்களை சேதப்படுத்தி, நினைவாற்றல் மற்றும் தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.
நிரந்தரமான மன அழுத்தம் மூளையில் கார்டிசால் அளவை அதிகரித்து, நரம்பு இணைப்புகளைத் தளரச் செய்கிறது.