மேலும் அறிய

புதுவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது

’’கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மனைவி கூறியநிலையில் பிரேத பரிசோதனையில் கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலமானது’’

புதுச்சேரி அருகே வில்லியனூர் அரசூர் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (43). அப்பளம் வியாபாரி. இவரது மனைவி தவமணி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 28ஆம் தேதி இரவு தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் உறங்கிவிட்டனர். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் சந்திரசேகர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி தவமணி, சந்திரசேகர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊராரிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், உடலில் நகக்கீரல் காயங்களுடன் கிடந்த சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சந்திரசேகர் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!


புதுவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது

இதையடுத்து வில்லியனூர் போலீஸார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சந்தேகத்தின் பேரில் சந்திரசேகரின் மனைவி தவமணியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அப்பள வியாபாரி சந்திரசேகர், தவமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில் அரசூரில் உள்ள கறிக்கடைக்கு தவமணி சென்ற போது, அங்கு வேலை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது

Villupuram Mother beat child : கள்ளக்காதலால் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்.. தாயின் பரபரப்பு வாக்குமூலம்!

இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதையடுத்து சந்திரசேகரின் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடிவந்த அஜ்மீர்கான், சந்திரசேகர் வெளியே செல்லும் போது, அவரது மனைவி தவமணியுடன் இருந்து வந்துள்ளார். இதையறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்ததால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

சந்திரசேகர்(இறந்து போனவர் )
Caption

இதே போல கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட தகராறை அறிந்து அங்கு வந்த அஜ்மீர்கான், தவமணியுடன் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெறித்தும், தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியது தெரியவந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகரின் மனைவி தவமணி மற்றும் கள்ளகாதலன் அஜ்மீர்கானை கைது செய்த வில்லியனூர் போலீஸார் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget