மேலும் அறிய

பாம் ரவி கொலை வழக்கில் திடுக் தகவல்: நாட்டு வெடுகுண்டு தயாரித்து திட்டமிட்டது அம்பலம்!

பாம் ரவி கொலை வழக்கில் கைதான 2 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பாம் ரவி கொலை வழக்கில் கைதான 2 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீது பேட்டையை சேர்ந்தவர் ரவி என்ற பாம் ரவி (வயது 33). பிரபல ரவுடியான இவர், தனது நண்பரான அந்தோணி (28) என்பவருடன் கடந்த 24-ந் தேதி மதியம் மோட்டார் சைக்கிளில் வாணரப்பேட்டை பகுதியில் சென்ற போது மர்ம கும்பலால் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் (21), பிரகாஷ், ராஜேஷ், சந்துரு, நவீன், ரமணி, மோகன், மாணிக்கம், சூர்யா ஆகிய 9 பேரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் தள்ளினர். இந்த கொலை தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்த வாணரப்பேட்டை அருண் குமார் (24), ரெட்டிச்சாவடி பிரவீன் குமார் (22) ஆகிய 2 பேர் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இதையடுத்து அருண்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் , காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி நீதிமன்றத்தில் முதலியார்பேட்டை போலீசார் மனு அளித்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 9-ந்தேதி தேதி அருண் குமார், பிரவீன் குமார் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பாம் ரவி, அந்தோணி ஆகியோர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கைதான  2 பேரும் சேர்ந்து தான் இரண்டு நாட்டு வெடி குண்டுகளை தயாரித்துள்ளனர். அதில் ஒன்றை பாம் ரவி, அந்தோணி மீது வீசியுள்ளனர். மற்றொரு வெடிகுண்டை நெட்டப்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்தனர்.  அதை போலீசார் நேற்று கைப்பற்றி, பாதுகாப்பாக வைத்துள்ளனர். அருண்குமார், பிரவீன்குமார் இருவரிடமும் இருந்து 2 கத்தி, மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 நாள் விசாரணைக்கு பிறகு 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று மாலை மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget