மேலும் அறிய
Advertisement
Crime: தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போக்சோ கைதி - திருச்சி சிறையில் அதிர்ச்சி
பெண் பயிற்சியாளர் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அந்த வாலிபரை மிரட்டவே, வாலிபர் பயந்து அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை போக்சோ கைதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. தண்டனை கைதிகளுக்கு வெல்டிங், ஃபிட்டர், டெய்லரிங் போன்ற பயிற்சிகள் அவர்கள் விருப்பத்தின் பேரில் அளிக்கப்படுகிறது. அதில், ஒரு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பெண் ஒருவர் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி வழக்கம்போல் பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். இந்தநிலையில் போக்சோ வழக்கில் கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்த 25 வயது வாலிபர் ஒருவர், தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்றும், இவர் உள்பட பயிற்சியில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் மதிய உணவுக்காக சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பயிற்சி வகுப்புக்கு அனைவரும் வரவேண்டும். ஆனால், அந்த வாலிபர் மட்டும், மற்றவர்கள் வருவதற்கு முன் விரைவாக வகுப்பறைக்குள் வந்து, அங்கு தனியாக இருந்த பெண் பயிற்சியாளரின் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை பாலிய வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை போக்சோ கைதி பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.@abpnadu #Trichydistrict #Trichyjail pic.twitter.com/bWIi7zH64D
— Dheepan M R (@mrdheepan) June 6, 2023
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயிற்சியாளர் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அந்த வாலிபரை மிரட்டவே, வாலிபர் பயந்து அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார். அங்கிருந்து வெளியேறிய பெண் பயிற்சியாளர் நடந்த சம்பவத்தை சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கழிவறைக்குள் பதுங்கி இருந்த வாலிபரை சிறைக் காவலர்கள் பிடித்து தனிமை சிறையில் அடைத்தனர்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெண் பயிற்சியாளர் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தும் அதை சிறைத்துறை அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவரை சமரசம் செய்து அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion