Crime : சேர்ந்து நடனமாட மறுத்த கடலோர காவல்படை அதிகாரியின் மனைவி - பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர்!
சென்னையில் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![Crime : சேர்ந்து நடனமாட மறுத்த கடலோர காவல்படை அதிகாரியின் மனைவி - பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர்! physical abuse to indian navy force officer wife government hospital doctor arrest chennai Crime : சேர்ந்து நடனமாட மறுத்த கடலோர காவல்படை அதிகாரியின் மனைவி - பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/25/05bd5eb01b38eb4c2748a149a410563e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள உத்தமர் காந்தி சாலையில் அமைந்துள்ளது பிரபல நட்சத்திர ஓட்டல். இந்த ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு பலரும் பங்கேற்று நடனம் ஆடியுள்ளனர். கடலோர காவல்படையில் பணிபுரியும் அதிகாரி ஒருவரும் தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
அப்போது, அங்கு இளைஞர் ஒருவரும் நடன நிகழ்ச்சிக்கு நடனம் ஆட வந்துள்ளார். நடனம் ஆடியவர்களில் பலரும் மது அருந்தியுள்ளனர். அந்த இளைஞரும் மது அருந்தி நடனம் ஆடியுள்ளார். நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் கடலோர காவல் படை அதிகாரியின் மனைவியுடன் நெருக்கமாக ஆட முயற்சித்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடன நிகழ்ச்சியிலேயே அந்த இளைஞர் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால், உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை இழுத்துச் சென்றனர். அவர் முழுவதும் மதுபோதையில் இருந்தார்.
மேலும் படிக்க : Crime: கோணி பையில் சிதைந்த நிலையில் கிடந்த சிறுமி உடல்.. என்ன நடந்தது? பதறவைக்கும் சம்பவங்கள்..
மதுபோதை தெளிந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சத்யபிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் அரசு மருத்துவர் என்பதும் அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் தேனாம்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு மருத்துவர் சத்யபிரகாஷை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சத்யபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவராகவும், மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் உதவி பேராசிரியராகவும் பணிபுரிபவரே கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
மேலும் படிக்க: வறுவல் சட்டிதான் ஆயுதம்.. 22 வெட்டுக்காயம்.. அம்மாவையே கொடூரமாக அடித்துக் கொன்ற 14 வயது மகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)