பிறந்து சில நாட்களே ஆன குழந்தை குப்பையில் மீட்பு - பழனியில் பரபரப்பு
பழனி அருகே மண்டைக்காடு பகுதியில் வீடுகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை போடும் குப்பை தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ளது அ.கலையமுத்தூர் ஊராட்சி. இங்குள்ள மண்டைக்காடு பகுதியில் வீடுகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை போடும் குப்பை தொட்டி ஒன்றில் இன்று பிற்பகலில் நாய்கள் ஏதோஒன்றை வெகுநேரமாக கடித்து இழுத்து கொண்டிருந்தன. அதை பார்த்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து நாய்களை விரட்டிவிட்டு பார்த்தபோது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிறந்து சிலநாட்களே ஆன குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியதுயார்? அதன் பெற்றோர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#பழனி அருகே பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் குப்பைத் தொட்டியில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. pic.twitter.com/Pqvyz9P2rX
— Nagaraj (@CenalTamil) June 11, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்