மேலும் அறிய

Anbil Mahesh Poyyamozhi : அரசுப் பள்ளிகளில் என்னென்ன வசதிகள்? : பட்டியலிட்டு கோரிக்கைவிடுத்த அமைச்சர் அன்பில்‌ மகேஸ்..

இதற்கு செயல்வடிவம்‌ வழங்கும்‌ வகையில்‌ இவ்வரசு பல்வேறு சிறப்பான செயல்‌ திட்டங்களை வகுத்துத் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் என்னென வசதிகள் என்று பட்டியலிட்ட பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி இன்று தெரிவித்துள்ளதாவது:

''ஒரு தலைமுறையில்‌ பெறும்‌ கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும்‌ பாதுகாப்பாக அமையும். அதற்கிணங்க, கல்வி அனைவருக்கும்‌ கிடைக்க வேண்டும்‌ என்று ஊர்‌தோறும்‌ பள்ளிகள்‌ திறந்து தமிழகத்தில்‌ கல்விப்‌ புரட்சியை ஏற்படுத்தியவர்‌ கருணாநிதி‌. அவரின்‌ வழிவந்த முதலமைச்சர்‌ ஸ்டாலின், "கல்வியும்‌ சுகாதாரமும்‌ எனது இரு கண்கள்‌" என்று கூறி அதனை உயர்த்தும்‌ வகையில்‌ பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டு மாணவக்‌
கண்மணிகள்‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி வருகிறார்‌.

தமிழ்நாட்டில்‌ உள்ள 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துக்‌ குழந்தைகளும்‌ பள்ளிக்குச்‌ சென்று கல்வி, கலை, இலக்கியம்‌ மற்றும்‌ விளையாட்டுகளில்‌ கவனம்‌ செலுத்தி தம்‌ அறிவைப்‌ பெருக்கி புதிய வரலாறு படைக்கும்‌ சிற்பிகளாகத்‌ திகழவேண்டும்‌ என்பது தமிழக முதலமைச்சரின்‌ கனவு. இதற்கு செயல்வடிவம்‌ வழங்கும்‌ வகையில்‌ இவ்வரசு பல்வேறு சிறப்பான செயல்‌ திட்டங்களை வகுத்துத் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

Anbil Mahesh Poyyamozhi : அரசுப் பள்ளிகளில் என்னென்ன வசதிகள்? : பட்டியலிட்டு கோரிக்கைவிடுத்த அமைச்சர் அன்பில்‌ மகேஸ்..

புதிதாய்ப்‌ பிறக்கும்‌ இக்கல்வியாண்டில்‌ புதிய உத்வேகத்துடன்‌ செயல்பட, அரசு வழங்கும்‌ விலையில்லாப் பாடப்‌ புத்தகங்கள்‌, சீருடைகள்‌, மடிக்கணினி, கல்வி உபகரணங்கள்‌, புத்தகப்‌ பை, முட்டையுடன்‌ கூடிய சத்தான மதிய உணவு, மிதிவண்டி, கட்டணமில்லாப்‌ பேருந்து வசதி, உயர்‌ கல்வி பயிலும்‌ பெண்‌ குழந்தைகளுக்கான மாதாந்திர ஊக்கத்‌ தொகை மற்றும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலைச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ மகத்தான திட்டம் உள்ளிட்ட அரசின்‌ பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்துக்‌ குழந்தைகளும்‌ முழுமையாகப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமாய்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

கூவும்‌ சூயில்களாகவும்‌, ஆடும்‌ மயில்களாகவும்‌, கல்வி வானில்‌ சிறகடிக்கும்‌ சுதந்திரப்‌ பறவைகளாகவும்‌ "மாணவப்‌ பருவம்‌ மாணவருக்கே, குழந்தைப்‌ பருவம்‌ குழந்தைகளுக்கே" என்பதை உறுதி செய்திடும்‌ வகையில்‌, குழந்தைத் தொழிலாளர்‌ முறையினை முற்றிலும்‌ அகற்றிட நமது சிறந்த கல்வி முறையினைப் பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தைகள்‌ அனைவரும்‌ பள்ளிக்கு வாருங்கள்‌ என அன்புடன்‌ இருகரம்‌ நீட்டி அழைக்கின்றேன்‌.

பெற்றோர்‌ அனைவரும்‌ பள்ளி செல்லும்‌ வயதுடைய தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி பெருமைப்படுத்த வேண்டும்‌ என்றும்‌, தொழில்‌ நிறுவனங்களின்‌ உரிமையாளர்கள்‌ எந்த சூழ்நிலையிலும்‌ குழந்தைகளை பணிக்கு அமர்த்தமாட் டோம்‌ என்றும்‌, ஆசிரியர்கள்‌ அனைவரும்‌ அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்து தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவோம்‌ என்றும்‌, குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க "இடைநில்லாக்‌ கல்வி . . . தடையில்லா வளர்ச்சி! . . . என்ற இலக்கினை நோக்கிப்‌ பயணிப்போம்‌ என்றும்‌ குழந்தைத்‌ தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று அனைவரும்‌ உறுதியேற்போம்‌ என்று
கேட்டுக் கொள்கிறேன்''‌.

இவ்வாறு பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget