Crime: கணவரை கட்டிப்போட்டு இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!
25 வயது கர்ப்பிணி பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருதாக பல சர்வதேச அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. அத்துடன் சர்வதேச பாலின இடைவேளி தரவுகளில் பாலின சமத்துவத்தில் பாகிஸ்தான் 156 நாடுகளில் 153 நாடாக மிகவும் மோசமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுகாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 25 வயது மதிக்க தக்க கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி வீட்டிற்குள் 5 நபர்கள் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.
அங்கு அவருடைய கணவரை கட்டி போட்டி அந்த 5 நபர் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார். அந்தச் சம்பவத்தில் ரயிலின் டிடிஆர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி தினமும் 11 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன் 2015-21 ஆண்டு முதல் சுமார் 22 ஆயிரம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்ற சம்பவங்களில் 77 பேர் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 90 பேருக்கு ஆணவ கொலைகள் செய்யப்பட்டிருக்கும் தரவுகளையும் அம்மாகாணத்தின் தகவல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு சம்பவம் அப்பகுதியில் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 23 பவுன் நகை, 8 ஆயிரம் ரூபாய் திருடிய நபர்... பயத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்