Crime | பல ஆண்டுகளாக பகை.. பழிக்குப்பழி வெறி.. சினிமா பாணியில் நடந்த புழல் ஏரிக்கரை கொலை..!
புழல் ஏரிக்கரையில் பெயிண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றத்தை அடுத்த அலமாதி விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. வயது 31. பெயிண்டிங் தொழில் செய்துவரும் ஏழுமலைக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். நேறு காலை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று புழல் ஏரிக்கரை அருகே ஏழுமலையை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர்.
அப்போது இக்கொலையை செய்தது சென்னை மூல கொத்தலத்தை சேர்ந்த முப்பது வயதான புவிலன், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 25 வயதான ரஃபீக், 31 வயதான ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, ‘கைதான ஆனந்தராஜின் அண்ணன் கார்த்திக் என்பவர் 2019-ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு மூல காரணமாக இருந்தவர் ஏழுமலை.
எனவே தனது அண்ணனான கார்த்திக் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக நண்பர்களான புவிலன் மற்றும் ரஃபீக்குடன் சேர்ந்து ஏழுமலையை கொலை செய்ததாக கூறினார். இதனையடுத்து கைதான மூன்று பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..
யோவ்! கடனை கட்டிட்டு செத்துப்போயா ! விவசாயியை மிரட்டிய பெண் ஊழியர்..வைரலாகும் ஆடியோ பதிவு!
Online rummy | ஆன்லைன் ரம்மி என்னும் மாயவலை.. எப்படி செயல்படுகிறது தெரியுமா? தப்பிப்பது எப்படி?