மேலும் அறிய

Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..

21 வயது மாணவர் மயாங்க் ராவல் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்துத்துவாவாதிகளின் அடுத்த அராஜகமாக புல்லி பாய் ஆப் சமீபத்தில் தலை தூக்கியது. கடந்த ஒன்றாம் தேதி இஸ்லாமிய பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள், இஸ்லாமிய பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இவர்கள் ஏலம் விடப்படுவதாக  புல்லி பாய் எனும் செயலியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சையை உருவாக்கிய இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 

பூதாகரமாக இந்த விஷயம் மாறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செயலியின் நிறுவனர்கள் மீது மகாராஷ்டிரா,  உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..

மும்பை இணைய குற்றப்பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து விசாரிக்கையில், பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.

இந்த சூழலில், பெங்களூரு விரைந்த மும்பை காவல் துறையினர் விஷால் ஜாவை கடந்த மூன்றாம் தேதி கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மும்பை இணைய குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரஷ்மி கரண்டிகர் 10 மணிநேரம் விஷாலிடம் விசாரணை நடத்தினார்.

Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..

அதில் இந்துத்துவா ஆதரவாளரான தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை ஏலம் விடுகிறோம் என்று அறிவித்ததாக விஷால் ஜா ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்தச் செயலியை விஷால் மட்டும் தனியாக நடத்தவில்லை. இதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படும் அவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த இந்த 18 வயது பெண் பள்ளிப்படிப்பை முடித்து பொறியியல் படிப்புக்குரிய நுழைவுத் தேர்வு எழுத தயாராகிவருகிறார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது

Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..

நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் நண்பர் ஒருவர் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி அவர் இச்செயல்களை செய்து வந்துள்ளார். `கியூ' என அழைக்கப்படும் நேபாளத்தைச் சேர்ந்தவர் ‘புல்லி பாய்' செயலில் செய்ய வேண்டிய விஷயங்களை கட்டளையிட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர். தற்போது இந்த கியூவை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

அதேபோல், உத்தரகாண்டை சேர்ந்த 21 வயது மாணவர் மயாங்க் ராவல் இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக  சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்பில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget