மேலும் அறிய
Advertisement
தொடரும் குட்கா வேட்டை..! ஸ்ரீபெரும்புதூரில் 11 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்..!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 11 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பறிமுதல்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 11 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தீவிர தணிக்கை
ஸ்ரீபெரும்புதூர் ( Sriperumbathur News ) : கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சென்னை குன்றத்தூருக்கு குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சேந்தமங்கலம் பகுதியில் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த மினி லோடு வேனை போலீசார் மடக்கினர்.
மடக்கி பிடித்த போலீசார்
இதையடுத்து மினி லோடு வேனை திறந்து சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா, கூல் லிப் போன்ற போதை பொருட்களை மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரியவந்தது. பின்னர் கடத்தலில் ஈடுபட்ட ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மகேஷ் குமார் (45) என்பவனை கைது செய்து ஒரு டன் எடையுள்ள 11 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய குன்றத்துரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவனை வழக்கு பதிவு செய்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இது தொடர்பாக காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், எக்காரணம் கொண்டும் அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு குறிப்பிட்ட சில வியாபாரிகள் தான், சிறு கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அவர்களையும் குறி வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion