மேலும் அறிய

Crime: தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய மகன் - நெல்லையில் பரபரப்பு

தனது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு நகை வருவதாகவும், அதை வாங்கி விற்றுவிட்டு அதில் வரும் கமிஷன் தொகையை பிரித்து கொள்வோம் என்று கூறி ஒரு லட்ச ரூபாய்   நண்பர்களிடம் வாங்கியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து,  மகன் வேல்ராஜ் (29). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்ததால் வேல்ராஜின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக  வேல்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் தனது தந்தையிடம் போன் செய்து சமாதானப்புரத்திற்கு வந்து பேருந்தில் இறங்குவதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்வதற்காக இசக்கிமுத்து சமாதானப்புரத்திற்கு வந்துள்ளார்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் வேல்ராஜ் வரவில்லை. இதையடுத்து இசக்கிமுத்து போன் செய்தபோது கேட்ட போது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூறிய நிலையில், ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்தால் தான் என்னை விடுவார்களாம் என்று தந்தையிடம் கூறியதால் பதறிய தந்தை இசக்கிமுத்து, இதனால் அதிர்ச்சி அடைந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வேல்ராஜ் செல்போன் சிக்னலை தொடர்பு கொண்ட போது அது ஊருடையார்புரம் பகுதியை காட்டி உள்ளது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்த போது வேல்ராஜ் உள்பட மூன்று பேர் அங்கு இருந்துள்ளனர்.


Crime: தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய மகன் - நெல்லையில் பரபரப்பு

அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது வேல்ராஜ் தனது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு நகை வருவதாகவும், அதை வாங்கி விற்றுவிட்டு அதில் வரும் கமிஷன் தொகையை பிரித்து கொள்வோம் என்று கூறியதோடு நகையை வாங்க முன் பணமாக ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று  நண்பர்களிடம் வாங்கியுள்ளார். அதனை நம்பி நண்பர்களும் பணத்தை கொடுக்க  அந்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பணத்தை கொடுத்த நண்பர்கள் வேல்ராஜிடம் திருப்பி கேட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லாத நிலையில் நாடகமொன்றை ஆடி உள்ளார். மேலும் பணம் கிடைத்ததும் அவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும் முடிவு செய்த வேல்ராஜ் தனது தந்தையிடம் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக நாடகமாடி ரூ.15 லட்சம் கேட்டது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து வேல்ராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாங்கிய பணத்தை கொடுக்கவும், உல்லாசமாக வாழவும் முடிவு செய்த மகன் பெற்ற தந்தையிடமே கடத்தல் நாடகமாடி 15 லட்சம் பணத்தை கேட்ட சம்பவம்  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget