மேலும் அறிய

நெல்லை: லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கிய நில அளவையர், உதவியாளர்

அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய உதவியாளர் சாந்தியிடம் கொடுக்குமாறு கூறினார்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை அடுத்த வடகரை பகுதியைச் சேர்ந்தவர் புதுமாடசாமி(44). இவர் தேங்காய் வியாபாரியாக இருந்து வருகிறார். இவரது சகோதரர் மகாராஜன். இவர்கள்  இருவரும் தங்களுக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை தனித்தனியாக பட்டா போடுவதற்கு கங்கைகொண்டான் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நிலத்தை அளவு செய்து பட்டா வழங்கும் நடவடிக்கைகளுக்கு  நில அளவையர் லிங்கம்மாள்  பட்டா ஒன்றிற்கு ரூ. 30,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சகோதரர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.  

நெல்லை: லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கிய நில அளவையர், உதவியாளர்

தொடர்ந்து நில அளவையர் லஞ்சம் கேட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா ஒன்றுக்கு ரூ. 25,000 தருவதாக பேசியுள்ளனர். எனினும்  லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து  நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் அவர்  அறிவுறுத்தலின்படி  நில அளவை செய்வதற்கு பணத்தை புதுமாடசாமியின் சகோதரர் நில அளவையர் லிங்கமாவிடம் கொடுத்தார். அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய உதவியாளர் சாந்தியிடம் கொடுக்குமாறு கூறினார். சாந்தி அதனை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  நெல்லை லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மனோஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லஞ்ச புகாரில் நில அளவையர் மற்றும் உதவியாளர் என இரண்டு பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்

YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?

ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்

TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!

Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?

Embed widget