Crime: வழக்கு ஒன்றில் இன்று சாட்சி சொல்லவிருந்த நபர் நேற்று இரவு கொலை - நெல்லையில் பயங்கரம்
வழக்கு ஒன்றில் சாட்சி சொல்லவிருந்த நிலையில் அருணாச்சலம் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துசெல்வி வீட்டு முன்பு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அருணாசலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயம் அடைந்த அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏர்வாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்,
தொடார்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தளபதிசமுத்திரம் மேலூர் பெரியகுளத்தில் மீன் குத்தகைக்கு விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் விவசாய சங்கத்தினருக்கும், வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏர்வாடி போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக அருணாச்சலம் என்பவர் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு குறித்த இன்றைய விசாரணையில் அவர் சாட்சி சொல்விருந்தார், இந்த சூழ்நிலையில் தான் நேற்று இரவு முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அருணாச்சலத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்வாடி போலீசார் இது சம்பந்தமாக தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்த சுரேஷ், சுடலைக்கண்ணு, செல்வம் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள முருகன் உட்பட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வழக்கு ஒன்றில் சாட்சி சொல்லவிருந்த நிலையில் அருணாச்சலம் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்