![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: நெல்லையில் அதிமுக பிரமுகர் கொலையில் இருவர் கைது - கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
கைது செய்யப்பட்டவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலமாக, கடந்த 6 மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் பாரில் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக மது தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![Crime: நெல்லையில் அதிமுக பிரமுகர் கொலையில் இருவர் கைது - கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் Nellai Crime news 2 person arrested in Nellai bar owner murder of AIADMK leader TNN Crime: நெல்லையில் அதிமுக பிரமுகர் கொலையில் இருவர் கைது - கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/f30c771c6e78e6c1fa6da466eb4c11661690351016115109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை புறநகர் பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும் இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18 வது வார்டு வேட்பாளராகவும் போட்டியிட்டார். இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பிச்சைராஜ் தனது வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக பேட்டை எம்ஜிஆர் நகர் பாருக்கு வந்துள்ளார்.
அப்போது பேட்டை ரயில் நிலையம் அருகே இருக்கும் வீரபாகுநகர் ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அந்த வழியாக வந்த நபர்கள் கண்டு பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிச்சைராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிச்சைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பேட்டை வெங்கபுரத்தை சேர்ந்த பாண்டி மற்றும் அதே பகுதியை சேர்ந்த நம்பிதுரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலமாக, கடந்த 6 மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் பாரில் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக மது தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பிச்சைராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த முன்விரோதத்தை மனதில் வைத்துள்ளனர். இதனால் அவரை தீர்த்து கட்டவேண்டும் என முடிவு செய்து அவர் பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக வரும் போது இருவரும் காத்திருந்து அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)