(Source: ECI/ABP News/ABP Majha)
அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை: 22 சவரன் தங்கம் 4 லட்சம் ரொக்கம் கொள்ளை
திருவண்ணாமலையில் என்ஜினீயர், அரசு பேருந்து நடத்துனர் வீடுகளில் மர்ம நபர்கள் 22 பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.
திருவண்ணாமலையில் என்ஜினீயர், அரசு பேருந்து நடத்துனர் வீடுகளில் மர்ம நபர்கள் 22 பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சி பகுதி சாரோன் கரியார் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மும்பையில் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌவுமியா வயது (29) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராதாகிருஷ்ணன் விடுமுறைக்கு திருவண்ணாமலைக்கு வந்து விட்டு கடந்த வாரம் மீண்டும் மும்பை திரும்பினார். சௌவுமியா நேற்று முன்தினம் கொளக்குடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளதாக அக்கம்பக்கத்தினர் சௌவுமியாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தன இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததோடு அதில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதே வீட்டு பக்கத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. இவரது மனைவி மற்ற மற்றும் குழந்தைகள் சங்கராபுரத்திற்கு சென்று உள்ளனர். ஜெய்சங்கர் இரவு வெளியே சென்று விட்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த துணி பைகளில் இருந்து துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அரிசி பையில் மறைத்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தெரியவந்தது. ஆகிய இருவர் வீடுகளிலும் மர்ம நபர்கள் நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் இது குறித்து ஜெய்சங்கர் மற்றும் சௌவுமியா ஆகிய இருவரும் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் தனித் தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடித்து சென்ற வீட்டிற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து பீரோ மற்றும் வீடுகளில் உள்ள பல்வேறு இடங்களில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இருவீட்டிலும் மொத்தம் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரணடு வீட்டுகளிலும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது