Crime | சூட்கேசில் பெண் சடலம் : ஒசூர் அருகே கொலையாளி கைது.. திடுக்கிட வைக்கும் பின்னணி..
திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் ஜெய்லாலை ஓசூர் அருகே தனிப்படையினர் கைது செய்தனர்.
திருப்பூர், தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த 7-ஆம் தேதி, புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அப்போது அப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகனத்திலும் நடந்து சென்றவர்களும் இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு சூட்கேசிஸ் ஒன்று பல மணிநேரமாக உள்ளது என தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் சூட்கேஸை சோதனை செய்தனர். அப்போது அந்த சூட்கேசில் பெண் சடலம் இருந்தது. உடனடியாக காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்குள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் யார் ? கொலை செய்யப்பட்ட பெண் யார் ? என விசாரனைகளை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த காட்சியை வைத்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த பெண் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நேஹா என தெரியவந்தது. மேலும் அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த 1 மாதமாக திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று பெண்ணோட தங்கிருந்த அபிஜித் வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார்.
அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியுள்ளனர் என்கின்றனர் , காவல்துறையினர். அபிஜித் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜெய்லால் ஆகியோரின் தொலைபேசியை பின்தொடர்ந்ததில் அவர்கள் மாநில எல்லையான ஓசூர் சுற்றுப்புற பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து 2 தனிப்படையினர் விரைந்து வந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாத்தக்கோட்டை கிராமத்தில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்லால் சவ்ராவை கைது செய்தனர். மேலும் மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Watch video : சேலை முக்கியமா? உயிர்? 10-வது மாடியில் இருந்து மகனை தொங்கவிட்ட தாய்..