மேலும் அறிய

கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். மற்றொரு மகள் குழாயைப் பிடித்தபடியே கிணற்றில் விடிய விடிய தவித்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் ( 50). பெங்களூருவில்  டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவேணி (45). இவர்களுக்கு பிரியா (19), திரிஷா (17) ஆகிய 2 மகள்களும், விஷ்ணு (14) என்ற மகனும் உள்ளனர் . இதில் பிரியா பர்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திரிஷா மத்தூர் அரசுப்பள்ளியில் பிளஸ்-2 வும், சிறுவன் விஷ்ணு மிண்டிகிரி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் திருப்பதி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது . இவர்களின் காதல் குறித்து அறிந்த மகாலிங்கம், அம்சவேணி ஆகியோர் மகளுக்கு திருமணம் செய்ய குண்டலானூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு  நிச்சயம்செய்து வைத்துள்ளனர். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!
இதனால் காதலர்கள் விஷம் குடித்தனர். தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த திருப்பதி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத்தொடர்ந்து அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே காதலன் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரியா, விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். பெண்ணை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் காதலனுக்காக விஷம் குடித்ததால் மனமுடைந்த அம்சவேணி, தனது கணவரிடம் என்ன கூறுவது என்று  தெரியாமல் தவித்து வந்துள்ளார். தனது கணவர் பெங்களூருவில் இருந்து வருவதற்கு முன்னதாகவே குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள அவர் முடிவு செய்தார். 


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

அம்சவேணி தனது 2-வது மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகியோரை அழைத்துக்கொண்டு தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில்  நள்ளிரவு 12 மணியளவில் குதித்தார்.  கிணற்றில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், நீரில் விழுந்து தத்தளித்த மாணவி திரிஷா கிணற்றில் அங்கிருந்த குழாயை பிடித்து உயிர் தப்பினார். அதேசமயம் அம்சவேணியும், சிறுவன் விஷ்ணுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழாயை பிடித்தவாறு விடிய, விடிய கிணற்றில் தவித்த திரிஷா காலையில் மேலே ஏறிவந்து கிராமத்தினருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் கிணற்றுக்கு விரைந்து வந்து இதுகுறித்து அவர்கள் மத்தூர் காவல்நிலையத்தில், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அம்சவேணி மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் தாய், மகன் 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மத்தூர் காவல் ஆய்வாளர்  முருகன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாய் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget