கைதானவர் திமுகவே கிடையாது! பக்கத்தில் நின்று படம் எடுத்தால் நாங்கள் பொறுப்பா? - மாணவி பாலியல் வழக்கில் அமைச்சர் விளக்கம்
துணை முதல்வர் நடந்து வரும்போது ஞானசேகரன் அவர் பக்கத்தில், கொஞ்சம் தள்ளி, அதாவது ஒரு கேப் இருக்கிறது. அங்கே நிற்கிறார் யாரோ படம் எடுத்துள்ளார்கள்.

அண்ணா பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று இல்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “பாலியல் வழக்கை மூடிமறைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுகவில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கைதானவர் திமுகவே இல்லை. கைதானவர்கள் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் என பொய் பரப்பி வரப்பட்டு வருகிறது. எங்களை போன்ற அமைச்சர்கள் செல்லும்போது அருகே நின்றுக்கொண்டிருப்பவர், பக்கத்தில் வருபவர் யார், யார், அவர் பின்னணி என்ன என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? செல்லும்போது அருகே நிற்பவர் படம் எடுத்தால் அதற்கும் எங்களுக்கும் தொடர்பு என்று கூறலாமா?
துணை முதல்வர் நடந்து வரும்போது ஞானசேகரன் அவர் பக்கத்தில், கொஞ்சம் தள்ளி, அதாவது ஒரு கேப் இருக்கிறது. அங்கே நிற்கிறார் யாரோ படம் எடுத்துள்ளார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தை அதிமுக அரசு மறைக்க முயற்சி செய்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை. வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை. ” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பாலியல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.
1. ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.
2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
3. அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.
தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2024
தமிழகம் முழுவதும், இதுபோன்ற… pic.twitter.com/K1ahEoIqE0
எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா?
முதலமைச்சர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

