தேனிலவில் அரங்கேறிய கொலைகள்: மூணாறு & மேகாலயா சம்பவங்கள்! கணவனை கொன்ற மனைவி, அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகள்!
மூணாரில் தேன் நிலவு சென்ற போது கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை அதிர வைத்த நிலையில் அதன் பின்னணி மற்றும் இரண்டு கொலைக்கு உள்ள ஒற்றுமை என்ன என்பதை காணலாம்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மேகலாயாவுக்கு தேனிலவுக்காக சென்ற கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்ப்படுத்திய நிலையில் அதே பாணியில் 19 வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் மூணாரில் சென்னையை சேர்ந்த தேன் நிலவு தம்பதி சென்ற போது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை அதிர வைத்த நிலையில் அதன் பின்னணி மற்றும் இரண்டு கொலைக்கு உள்ள ஒற்றுமை என்ன என்பதை காணலாம்.
சென்னை தம்பதி:
2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் பருவமழை தொடங்கிய காலம் அது, சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் வித்யா. இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. ஜூன் 7 ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் இருவரும் ஜூன் 16 ஆம் தேதி தேன் நிலவுக்காக கேரள மாநிலத்தில் உள்ள மூணாருக்கு சென்றனர். சென்னையிலிருந்து திருச்சூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து குருவாயூர் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மூணாருக்கு வாடகை டாக்சி மூலம் சென்றனர். அங்குள்ள பிரபல காட்டேஜில் அறை எடுத்து தங்கினர்.
குண்டலா அணை அருகே கொலை:
மறுநாள் காலை இருவரும் மூணாறு அருகே உள்ள குண்டலா அணை அருகே சுற்றி பார்க்க சென்ற போது அந்த பகுதியில் இரண்டு இளைஞர்கள் தனது கணவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை எடுத்துச்சென்றதாக வித்யா அலறியடித்துக்கொண்டு வந்து டாக்சி ஓட்டுநரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து டாக்சி ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
ஆட்டோ ஓட்டுநர் தந்த துப்பு:
இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வாக்குமூலம் திருப்புமுனையை தந்தது. அதில் தனது ஆட்டோவில் இருவரை குண்டலா அணை அருகே இறக்கி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர்களது செல்போனில் தகவல் கிடைக்கவில்லை என கூறி தனது செல்போனில் இருந்து வேறு ஒரு எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக தெரிவித்தார். இதை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
கொலை நடந்தது எப்படி?
கொலையாளிகள் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். கணவர் அனந்தராமனை வித்யாலட்சுமி இருவருடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இருவரும் திருமணத்திற்கு முன்னர் காதலித்து வந்ததாகவும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வித்யாவை அனந்த்ராமனுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். அதன் பின்னர் தான் காதலன் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அன்புராஜின் உதவியுடன் கொலை செய்துள்ளார் கொலைக்குப் பிறகு, அதிகாரிகளைத் திசைத்திருப்ப அதை ஒரு கொள்ளை சம்பவமாக மாற்றினார் வித்யா
வழக்கை வழிநடத்திய மூணாறு டிஎஸ்பி கே.ஏ. முகமது ஃபைசல் கூறுகையில், எஸ்எம்எஸ்கள் வழக்கைத் முடிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. தொலைபேசி அழைப்பு பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூவரின் ஒருங்கிணைப்புக்கு உறுதியான ஆதாரங்களை அளித்தன என்றார்.
மேகலாயா மற்றும் மூணாருக்கும் உள்ள ஒற்றுமைகள்:
மூணார் கொலை சம்பவம் நடந்து 19 வருடங்கள் கழித்து மத்திய பிரதேச தொழிலபதிபர் கொலையானது தேன் நிலவு சென்ற போது அரங்கேறியுள்ளது. இரு கொலைகளுக்கும் நிறை ஒற்றுமைகள் உள்ளன.
- இந்த இரண்டு கொலைகளும் அவர்களின் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் நடந்தன.
- இரண்டு பெண்களும் தங்கள் முன்னாள் காதலர்களுடன் சேர்ந்து தங்கள் கணவனை கொல்ல சதி செய்தனர்.
- கொலைக்கு முன்பு இரு தம்பதியினரும் கோவிலுக்கு சென்றனர். சோனம் ஜோடி அசாமில் உள்ள காமாக்யா மற்றும் வித்யா தம்பதியினர் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்குச் சென்றனர்.
- இந்த கொலைகள் இரண்டும் தனிமைப்படுத்தப்பட்ட, இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலங்களில்( மூணார் .மற்றும் சோஹ்ரா) நடந்தன.
- முக்கியமாக, இரண்டு குற்றங்களும் திட்டமிடப்பட்டு இறுதியில் மொபைல் போன் ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன.






















