மேலும் அறிய

Meera Mithun: ‛வாய் தவறி பேசிவிட்டேன்... மன்னித்துவிடுங்கள்...’ -மீரா மிதுன்

நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். -மீரா மிதுன்.

பட்டியலின மக்கள் குறித்து தான் வாய் தவறி பேசிவிட்டதாகவும், பேசியது தவறு என்றும் ஜாமீன் மனுவில் நடிகை மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலின மக்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கேரளாவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனுவில், ‘என்னைப் பற்றி அவதூறாக 
 செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின மக்களை பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தவறுதான். ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து கைதான அவருடைய நண்பர் சாம் அபிஷேகும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவில், அவருக்கு, இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று வரவுள்ளது. 

இதனிடையே, மீரா மீதுனின் யூடியூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். பட்டியலின மக்கள் தொடர்பாக, மீராமிதுன் பேசிய வீடியோவை நீக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Meera Mithun: ‛வாய் தவறி பேசிவிட்டேன்... மன்னித்துவிடுங்கள்...’ -மீரா மிதுன்

அப்படி என்னதான் பேசினார் மீரா?

"பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" இது தான் மீராவின் பேச்சு. அவர் இதை நான் பேசவில்லை என்றெல்லாம் மழுப்ப முடியாது. ஏனெனில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது.

தமிழகம் முழுவதும் புகார் மனுக்கள் குவிந்த நிலையில், சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான வன்னிஅரசு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

ABP Exclusive: அனைத்து துறைகளையும் போல பெண்கள் ஆன்மீகத்திலும் சாதிக்க வேண்டும்- பெண் ஓதுவார் சுஹாஞ்சனா...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Embed widget