போலி கையெழுத்து போட்டு விவசாயை ஏமாற்றிய டிராக்டர் நிறுவனம் - நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை
போலி கையெழுத்து இட்டு விவசாயை ஏமாற்றிய டிராக்டர் நிறுவனம் உரிமையாளர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து விவசாயி தனது தாயாருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
![போலி கையெழுத்து போட்டு விவசாயை ஏமாற்றிய டிராக்டர் நிறுவனம் - நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை Mayiladuthurai tractor company cheated the farmers with fake signatures Farmers have been protesting for years demanding action TNN போலி கையெழுத்து போட்டு விவசாயை ஏமாற்றிய டிராக்டர் நிறுவனம் - நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/ba8a6410b232263dcd5a313bb9b0e7a41686038020649186_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021 -ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படாத நிலையில், 2021 -ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதன்மோகன் அவரது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2022 -ம் ஆண்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம்குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார். அப்போதும் அவருக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மதன்மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் கண்ணதாசன், வேல்முருகன் ஆகிய 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த மன்மோகன் கடந்த மாதம் காவல்துறையினரை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், போலீசார் இதுவரை டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யாத காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மதன்மோகன் மற்றும் அவரது தாயார் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியில் அனுப்பினர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம் போல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர். விவசாயியை ஏமாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வரும் விவசாயினை கண்டு பலரும் வருத்தத்தையும் , நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
Chengalpattu Court: மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி செயல் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)