மேலும் அறிய
Chengalpattu Court: மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி செயல் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
20 ஆயிரம் ரூபாயை சுகுமாரிடம் கொடுத்த பொழுது மறைந்திருந்த சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![Chengalpattu Court: மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி செயல் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை chengalpattu court has sentenced the Assistant Executive Engineer of the Electricity Board to three years in jail Chengalpattu Court: மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி செயல் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/b613c96538d331c866824254cad174fb1686025107144191_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செங்கல்பட்டு நீதிமன்றம்
மரம் விற்பனை கடைக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயல் பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு (Chengalpattu): சென்னை கீழ்கட்டளை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான மரம் விற்பனை கடை உள்ளது. இந்த கடையில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்சாரத்தை துண்டித்துள்ளார். அதன் பிறகு அவர் சென்னை பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராக பணியாற்றி வரும் சுகுமார் என்பவரிடம் மின் இணைப்பு வழங்க கோரி உள்ளார். அப்பொழுது மின்னினைப்பு வழங்க வேண்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என சுகுமார் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் லஞ்சம் கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயை சுகுமாரிடம் கொடுத்த பொழுது மறைந்திருந்த சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை செங்கல்பட்டு தலைமை குற்றவியல், நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயஸ்ரீ மூன்றில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதவி செய்ய பொறியாளர், சுகுமாருக்கு 3 ஆண்டுகள் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அபராத தொகுதியை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion