மேலும் அறிய

இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!

"மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்களை மடக்கிய போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு 5 திருக்குறள் கூறச் சொல்லி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சீர்காழி: "இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிக்கக் கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எக்காரணம் கொண்டும் வாகனங்களை இயக்கக் கூடாது" என்பதை வலியுறுத்தி சீர்காழியில் போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று சிறுவர்களை நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனையாகத் 'திருக்குறள்' கூறச் செய்து, பின்னர் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

எஸ்பி உத்தரவின் பேரில் தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்துக்களைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும், விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியில், சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் (SI) மணியரசன், காவல் ஏட்டு கார்த்திக் மற்றும் போலீசார் முன்னிலையில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போலீசாரின் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கை

இந்த வாகன சோதனையின் போது, அவ்வழியாக விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கி வந்தவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், சாலை பாதுகாப்பு குறித்துப் போலீசார் பின்வரும் கடுமையான அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கட்டாய ஹெல்மட்: இருசக்கர வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவருமே கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும்.

மதுபோதைக்குத் தடை: மது போதையில் வாகனங்களை இயக்கினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கை மூலம் கடுமையான சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

ரூ.25,000 அபராதம்: மிக முக்கியமாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் (Minors) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. மீறி இயக்கினால், வாகனத்தை இயக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களுக்கு வாகனம் வழங்கிய பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும். அத்துடன் மோட்டார் வாகன சட்டப்படி ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

சிறுவர்களுக்கு போலீசாரின் நூதன 'திருக்குறள்' தண்டனை

போலீசாரின் இந்த வாகன சோதனை தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் (Triples) மூன்று சிறுவர்கள் ஆபத்தான முறையில் அதிவேகமாகப் பயணித்து வந்தனர். இதைப் பார்த்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் மற்றும் போலீசார், அதிர்ச்சியடைந்து அந்தச் சிறுவர்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவருமே 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும், அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை என்பதும் தெரியவந்தது. வழக்கமான பாணியில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பதை விட, அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், மனரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போலீசார் ஒரு நூதன முயற்சியைக் கையாண்டனர். பிடிபட்ட மூன்று சிறுவர்களையும் வரிசையாக நிற்க வைத்த போலீசார், "நீங்கள் செய்த தவறை உணரும் வகையில், ஆளுக்கு தலா ஐந்து திருக்குறள்களைத் துல்லியமாகக் கூற வேண்டும்" என்று நிபந்தனை விதித்தனர். போலீசாரின் இந்த நூதன தண்டனையைக் கேட்டு முதலில் திகைத்த சிறுவர்கள், பின்னர் தாங்கள் பள்ளியில் கற்ற திருக்குறள்களை ஒவ்வொன்றாக யோசித்து போலீசாரிடம் மனப்பாடமாகக் கூறினர். சிறுவர்கள் திருக்குறள் கூறி முடித்ததும், அங்கிருந்த போலீசார் அவர்களைப் பாராட்டி, இனிமேல் பைக் ஓட்டக் கூடாது என அறிவுரை வழங்கினர்.

பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை

சிறுவர்கள் திருக்குறள் கூறி முடித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களை அலைபேசி மூலம் உடனடியாகத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். சீர்காழி தென்பாதி பகுதிக்கு நேரில் வந்த பெற்றோர்களிடம், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிருக்கான ஆபத்துகள் மற்றும் சட்ட சிக்கல்களைப் போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.

"இனி ஒருபோதும் தங்களது பிள்ளைகளிடம் இருசக்கர வாகன சாவியைக் கொடுக்க மாட்டோம்" என்று பெற்றோர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து, முதற்கட்ட எச்சரிக்கையாகச் சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீசார், இனிமேல் விதிகளை மீறினால் பைக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதத்துடன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். சீர்காழி போக்குவரத்து போலீசாரின் இந்தத் தமிழ் கலந்த நூதன விழிப்புணர்வு நடவடிக்கை, அங்கு கூடின பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Seeman Emotional : ’பெரியப்பா இருக்கேண்டா - இயக்குநர் செழியன் மறைவு | சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
’இயக்குநர் செழியன் மறைவு – சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
E.V. Velu Look Out Notice : எ.வ.வேலு வழக்கில் திடீர் திருப்பம்.! அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
எ.வ.வேலு வழக்கில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Embed widget