மேலும் அறிய

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

சாராயம் விற்பனை செய்யச்சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக முன்னாள் சாராய வியாபாரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாராயம் விற்க சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும், சாராயம் விற்காமல் திருந்தி இருந்த தன்மீதும், தன் மகன்கள் மீதும் பெரம்பூர் காவல்நிலையத்தில் பொய்வழக்குப் போடுவதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் சாராய வியாபாரி புகார்மனு அளித்திருப்பது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் மகன்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பெரம்பூர் காவல்துறையினர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்கு சென்று அங்கு மது அருந்தி, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மது விலை குறைவு என்பதால் மதுபாட்டில்கள் வாங்கி வருவேன். மேலும், அதனை தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்வேன். 

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

அப்படி இருந்தபோது மதுகடத்தியதாக வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியதாக கூறி காவல்துறையினர் என்னை கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய் என்று காவல்துறையினர் கூறினர். அதனால் சாராய விற்பனை செய்து வாரந்தோறும் காவல்துறையினருக்கு 7 ஆயிரம் ரூபாய் மாமுல் பணமும் அவ்வப்போது மீன், கறி உள்ளிட்டவைகளும் வாங்கி கொடுத்து வந்தேன்.  இந்நிலையில் எனது மனைவி இறந்த நிலையில் மகன்களுக்கு திருமணமாகி மருமகள்கள் வந்துவிட்டதால் சாராய விற்பனையை நிறுத்திவிட்டேன். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனைசெய்யமாட்டேன் திருந்தி வாழவிரும்புவதாக எழுதிகொடுத்து சென்றேன்.  

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

ஆனால், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சண்முகம், விக்கி, பிரேம் உள்ளிட்ட  காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும், எனது மகன்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் தீனாஅரசன் ஊருக்கு வந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய்வழக்கு போட்டு என்னிடம் பணம்கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராய பாக்கெட்டுக்களை கொண்டுவந்த என்வீட்டு முன்பு போட்டு உடைத்து காவல்துறையினர் வீடியோ எடுத்து செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினர் மது விற்பனையை கண்டுகொள்ளாமல், மது விற்பனைக்கு துணைபோகும் செயல் நடைபெற்று வருவதாகும், இதற்கு எடுத்துக்காட்டாக சாராய வியாபாரிக்கு துணை போனதாக கூறி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் கடந்த மாதம் பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் நீக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget