(Source: ECI/ABP News/ABP Majha)
கிடாவெட்டு விருந்தில் காவலர்கள் பிஸி.... சீர்காழியில் 12 கடைகளில் கைவரிசை காட்டிய களவாணிகள்
சீர்காழி கடைவீதியில் 12 கடைகளை உடைத்து ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடி சென்ற வட மாநில மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் பழக்கடை, பூக்கடை துணிக்கடை, வாழைப்பழம் மொத்த வியாபார கடை, மளிகை கடை உள்ளிட்ட 12 கடைகளில், நேற்று நள்ளிரவு இரவு பெய்த மழையை பயன்படுத்தி இரண்டு வட மாநில இளைஞர்கள் அனைத்து கடைகளில் கதவுகளை உடைத்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரின் டயர் திருட்டு, கொலை, கொலை முயற்சி, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதேபோல தற்போது சீர்காழியில் முக்கிய கடைவீதியில் 12 கடைகளை கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் திருடி சென்ற சம்பவம் அரங்கேரி உள்ளது. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள் தங்கள் தூக்கத்தை துளைத்தல் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Pushpa2: மொட்டைத் தலையில் மிரட்டலாக ஃபஹத் பாசில்.. பிறந்த நாள் பரிசு கொடுத்த புஷ்பா படக்குழு..!
இந்நிலையில் இது குறித்து சீர்காழி வியாபாரிகள் சிலர் கூறுகையில், நேற்றிரவு சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள காவல் முனீஸ்வரன் கோயிலில் காவல்துறையினர் கிடா வெட்டி படையல் போட்டதாகவும், காவல்துறையினர் கரி சமைத்து சாப்பிட்டதால் இரவு நேர ரோந்து பணியை காவல்துறையினர் ஈடுபடவில்லை எனவும், இதனை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும் இதனை தமிழக காவல்துறை தலைவர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.