மேலும் அறிய

மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மயிலாடுதுறை அருகே தனது இடத்தை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி கொண்டதால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட  மாணிக்கபங்கு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். வயது 68. விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகே நேற்று விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மேலும், இறந்த கோவிந்தராஜிடம் இருந்து கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு சொந்தமான 27 சென்ட் இடத்தினை கடந்த 2015- ம் ஆண்டு மாணிக்கபங்கு வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் சென்ட் 7 ஆயிரம் ரூபாய் என்று விலைபேசி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிகொண்டு ஓர் ஆண்டு காலத்திற்குள் பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு இடத்தினை கிரயம் செய்து கொள்வது என்று ஒப்பந்தம் பத்திரம் செய்து கொண்டோம் . 


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

அதன்பிறகு பல முறை அவரது மகன் சோமசுந்தரத்திடம் கூறியும் அவர்கள் மீதம் பணம் கொடுக்காமல்  இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சோமசுந்தரம் இடத்தினை கிரயம் செய்துகொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அக்ரிமென்ட் போட்டு காலாவதியாகி விட்டது. அப்போது விற்ற விலை வேறு. தற்போது அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதனால் தற்போது சந்தை விலைக்கு பணம் கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோவிந்தராஜ் கூறினார். அதன்பிறகு திடீரென்று சோமசுந்தரம் தனது இடத்தில் கொட்டகை போட்டடுள்ளார். இடம் கிரயம் செய்து கொடுக்காமல் எப்படி கொட்டகை அமைக்கலாம் என்று கூறி பஞ்சாயத்தில் முறையிட்டபோது, இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். 

 


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மார்ச் மாதம் ஊர் பஞ்சாயத்திற்கு சென்றபோது என்னை மிரட்டி, அச்சுறுத்தி 20 லட்சம் ரூபாய் விலைபோகும் இடத்தினை 4 லட்சம் ரூபாய்க்கு குறைந்த விலைக்கு நிலத்தை விற்பனை செய்வது என்று எழுதி வாங்கி கொண்டனர். இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றி இடத்தை காவல்துறையினர் மீட்டுக்கொடுக்க வேண்டும். இந்த கடித நகல் ஒன்றை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

 

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பொறையார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget