மேலும் அறிய

சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவன், அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் மோதிய விபத்தில், எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த மற்றொரு மாணவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

விபத்து நடந்தது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு காவல் எல்லைக்குட்பட்ட தென்னாம்பட்டினம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மகன் ஸ்ரீகாந்த் (13). இவர் கோனையாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காலை வழக்கம் போல பள்ளிக்குச் செல்வதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனும் 7-ம் வகுப்பு மாணவனுமான பிரசன்னா (12) என்பவருடன் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். 

இருவரும் தென்னாம்பட்டினம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் மிக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒரு தண்ணீர் டேங்கர் ஏற்றிய டிராக்டர் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக அந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் சென்ற சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்

இந்த கோர விபத்தில் டிராக்டரின் சக்கரம் ஸ்ரீகாந்தின் உடல் மீது ஏறியதில், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பிரசன்னா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகப் பொதுமக்கள் 108 அவசர ஊர்திக்குத் தகவல் அளித்தனர். படுகாயமடைந்த மாணவன் பிரசன்னாவை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை மற்றும் கைது

தகவல் அறிந்து திருவெண்காடு காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மாணவன் ஸ்ரீகாந்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற டிராக்டர் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, விபத்துக்குள்ளான டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

பள்ளிக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பும் முன்பே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தென்னாம்பட்டினம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீகாந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

பொதுமக்கள் கோரிக்கை

இப்பகுதியில் கிராமப்புறச் சாலைகளில் குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டர்கள் மற்றும் கனரக வாகனங்கள் மிக அதிவேகமாகச் செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிப் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிச் சீருடையுடன் மாணவன் உயிரிழந்த இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget