மேலும் அறிய

தென் மாநிலங்களை மிரள வைத்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. 2 வருடத்திற்கு பின்பு கைது - சிக்கியது எப்படி?

விசாரணையில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடங்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களை 4 மாநில காவல் துறையினர் 2 வருடங்களாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

4 மாநில காவல்துறையினர் தேடி வரும் மங்கி குல்லா கொள்ளையர்களை 2 வருடத்திற்கு பின்பு கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர். கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடம் வாங்கிய கொள்ளையர்கள்.

தென் மாநிலங்களை மிரள வைத்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. 2 வருடத்திற்கு பின்பு கைது - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள். தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் வடமதுரை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல்  மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் துணை காவல் கண்காணிப்பாளர். கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டிய இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாங்கள் திருடிய 4 சக்கர வாகனத்தில் திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி அருகே வந்துள்ளனர். அந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஷிப்ட் டிசையர் காரில் வந்த கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சேர்ந்த வெங்கடேசன் மகன் தன்ராஜ் (எ) தேவ் (வயது 28), மற்றும் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் (வயது 24), திருப்பத்தூர் பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சுதாகர் (வயது 45) ஆகியோரை விசாரணை செய்தனர்.

தென் மாநிலங்களை மிரள வைத்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. 2 வருடத்திற்கு பின்பு கைது - சிக்கியது எப்படி?

விசாரணையில் அவர்கள் திருட்டு காரில் வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர். அவர்கள் திருடிய வெள்ளி குத்துவிளக்கு, வைர நெக்லஸ், ரூ.40 ஆயிரம் பணம், செல்போன்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார் மற்றும் மங்கி குல்லா, கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடங்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களை 4 மாநில காவல் துறையினர் 2 வருடங்களாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
Embed widget