மேலும் அறிய

Crime: முற்றிய வாக்குவாதம்.. மனைவி மற்றும் இரு குழந்தைகளை பேட்டால் அடித்துக் கொன்ற கொடூரம்.. என்ன நடந்தது?

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் பக்தி. 29 வயதான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் பேட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் பக்தி. 29 வயதான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவியான பாவனா தனது இரு குழந்தைகளான அன்குஷ் மற்றும் குஷியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இது அமித் பக்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே அமித் பக்தி நேற்று தனது மனைவியை பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பாவனா மற்றும் இரு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். சமாதானம் செய்ய சென்ற இடத்தில் அமித் பக்தி - பாவனா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பக்தி அங்கிருந்த கிரிக்கெட் பேட்டால் பாவனா மற்றும் இருகுழந்தைகளை அடித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக பாவனா உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அமித் பக்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

டீ கேட்டதில் வாக்குவாதம் - மனைவி கொலை 

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் தர்மவீர் என்பவருக்கும், அவரது மனைவி சுந்தரிக்கும் டீ போடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மவீர் வீட்டில் வைத்திருந்த ஆயுதத்தால் மனைவியின் கழுத்தில் மூன்று நான்கு முறை தாக்கியுள்ளார். இதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் போலீசில் அளித்த புகாரின் பேரில்  தர்மவீர் கைது செய்யப்பட்டார். 


மேலும் படிக்க: Masana Muthu: "வெள்ளத்துல வீடு இடிஞ்சுடுச்சு! பெத்தவங்க கதறுறாங்க! அழுகையை கட்டுப்படுத்திட்டு இருக்கேன்" - தமிழ் தலைவாஸ் வீரர் மாசாணமுத்து வேதனை

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget