மேலும் அறிய

10 வயது மகளை அடித்துக் கொடுமைப்படுத்திய சித்தி; காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவன்!

மும்பையில் தன்னுடைய 10 வயது மகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக தன்னுடைய 2வது மனைவி மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மும்பையில் அமைந்துள்ளது முலுண்ட். இங்கு 33 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய 2வது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த 33 வயதான இளைஞர் அந்த பகுதியில் ஆடைத்தொழில் செய்து வருகிறார். அவருக்கு தன்னுடைய முதல் மனைவி மூலம் 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

கொடுமைப்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி:

இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. அந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் கடந்த 2018ம் ஆண்டு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் இரண்டாவது மனைவிக்கு அவரின் முதல் குழந்தை மீது வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்துள்ளார். அந்த குழந்தையை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த 10 வயது சிறுமியை அந்த இளைஞரின் இரண்டாவது மனைவி, நெருப்பால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.  இதனால், அந்த 10 வயது குழந்தை வலியில் துடித்துள்ளது. இதைக்கண்டு மனம் நொந்து போன அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மனைவி மீது புகார்:

நவ்கோர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தனது இரண்டாவது மனைவி தன்னுடைய முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தையின் மகளை மரக்குச்சியால் அடிப்பது உள்பட கொடுமைகளை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள சிறுமிக்கு மன நல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த செப்டம்பர் மாதம் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த 10 வயது சிறுமியின் சித்தி, தன்னுடைய கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் இதுபோன்று பல இடங்களில் அதிகரித்து வருவது சமூகத்தை மிகவும் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை? - 6 பேரை கைது செய்த போலீஸ்! நெல்லையில் கொடூரம்

மேலும் படிக்க: திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget