Crime: மகாராஷ்டிராவில் பயங்கரம்: மெசேஜ் அனுப்பிய தாய்...வெட்டிக் கொலை செய்த மகன்...என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் பெற்ற தாயை, அவரது மகனே கோடறியால் வெட்டிக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் பெற்ற தாயை, அவரது மகனே கோடறியால் வெட்டிக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் டவுன்ஷிப்பின் பரோல் பகுதியைச் சேர்ந்தவர் சோனாலி கோக்ரா (35). இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார். சிறுவன் தனது 35 வயதான தனது தாயின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறான். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று அதாவது ஞாயிற்றுக் கிழமை இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிறுவனின் தாய் யாரோ ஒருவருக்கு டெக்ஸ்ட் செய்து கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் டெக்ஸ்ட் செய்வதை நிறுத்த வேண்டும் என தாயிடம் கூறியிருக்கிறார். இதற்கு மறுத்த சிறுவனின் தாய் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், கடும் கோபமடைந்த சிறுவன் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து தனது தாயை சரமாரியாக அடித்துள்ளார். தாயின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிறுவன் பயன்படுத்திய ஆயுதம், அவரது தாய் பயன்படுத்திய மொபைல் போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "டெக்ஸ்ட் மெசேஜ் செய்ததற்காக தாயை சிறுவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறோம். இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்துள்ளதாக” போலீசார் தெரிவித்தனர். டெக்ஸ்ட்ட மெசேஜ் செய்ததற்காக தாயை சிறுவன் ஒருவர் கொடூரமாக கொலை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க